பணத்தை விட இது தான் முக்கியம்.. விஜயகுமார் மகள் நெகிழ்ச்சி!
பணத்தை விட, உறவுகள் தான் முக்கியம். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பழம் பெரும் நடிகர் விஜயகுமார், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், குணச்சித்திர வேடங்களில், சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரின் இரண்டாவது மகள் அனிதா தனது
நடிகர் விஜயகுமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில், நடிகை மஞ்சுளாவுடன் படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர இருவரும் 1976ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர். இதில், விஜயகுமாரின் ஒரே ஒரு ஆண்வாரிசு என்றால் அது நடிகர் அருண்விஜய் தான். அருண் விஜய்யும் அப்பாவை போல தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
அனிதா விஜயகுமார்: இதில் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா மருத்துவராக லண்டலில் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் தியாவும் அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். இதில் தியாவுக்கு தில்லா என்பவருடன் கடந்த 2023ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் தமிழ் திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த, பிரபு, சினேகா,பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ரவி மோகன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
சூப்பர் குடும்பம்: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார், அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், அம்மா, அப்பா,மகள், மருமகன் என அனைவருடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோவை பார்த்த பலர் சூப்பர் குடும்பம் என கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இத்தனை ஆண்டுகள் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்த அனிதா, தற்போது சென்னையில் அப்பா, அம்மாவுடன் செட்டுலாகி உள்ளார்
பணம் முக்கியம் இல்லை: இதற்கான காரணத்தை கூறிய அனிதா விஜயகுமார், நான் மருத்துவராக விருப்பப்பட்டேன். இதனால், அப்போதே லண்டனுக்கு படிக்க சென்று விட்டேன். எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் எனது அப்பா, அம்மா செய்து தந்தார்கள். பின் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டேன். அதுமட்டுமில்லாமல், 15 வருடங்களாக எமர்ஜென்சில் வேலை பார்த்து இருக்கிறேன், பலரும் உயிர் போகும் தருவாயில் குடும்பத்தை பார்க்க வேண்டும், குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஏன் என்றால், எப்போதுமே பணத்தை விட, உறவுகள் தான் முக்கியம். அதனால் என் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக என் சொந்த நாட்டுக்கே வந்து விட்டேன் என்று அனிதா தெரிவித்துள்ளார்.