Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புலிகளை அழித்ததாக கூறும் இராணுவத்தால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி!

பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத மணல் அகழ்வோரால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளை அழித்ததாக கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன் கேள்விஎழுப்பினார். 

கரைச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது. 

குறித்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தவிசாளர், உபதவிசாளர், அதிகாரிகள் பொலிசார் இராணுவத்தினர் மற்றும் பல அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், வனஜீவராசிகளால் திணைக்களத்தின் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரை இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான பதில் வழங்க உயர் அதிகாரிகள் வருகையின்மை காரணத்தால் குறித்த விடயம் தொடர்பாக  தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மேலும் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த வெறுமனே பொலிசார் மற்றும் அதிகாரிகள் மாத்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல்லை பொதுமக்கள் பொது அமைப்புக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதற்கு பதிலளித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன்,

புலிகளை அழித்ததாக கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லையா எனவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத மணல் அகழ்வோரால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.