Breaking News
றவுடி டாக்டர் ; அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்,
,

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.