நாட்டின் தூண்கள் கிராமங்கள், கிராமத்தின் தூண்கள் கால்நடைகள்.கால் நடைகளும் கடவுள்!
.
கால் நடைகளும் கடவுள்
ஒரு முருங்கை மரம், ஒரு எருமை பசு இருந்தால் ஒரு மனிதனின் காலம் நிறைவு என்பது அன்றைய பழமொழி.
முருங்கை கீரை, காய்கள் உடைத்து சமைத்துக் கொள்வர், எருமை பாலை விற்று அரிசி பருப்பு அத்தியாவசியங்களை வாங்கிக் கொள்வர், பசி தட்டுபாடு இல்லாமல் காலங்கள் ஓடும்
அதேபோல் இன்றும் பல கிராமங்களில் கால்நடைகளை மூலதனமாய் வைத்து பிழைக்கும் குடும்பங்கள் எத்தனையோ
தன்னை வளர்ப்போருக்கு தனது இரத்தத்தை கொடுத்து பசியாற்றுக்கிறது கால்நடைகள், பல வீட்டில் பிள்ளைகள் படிப்பதே அவர்கள் வளர்க்கும் கால்நடைகளால் தான்
இதனால் தான் கிராமங்களில் கால்நடைகள் கடவுளாக போற்றப்படுகிறது. வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன உரிமையோ பாசமோ அதே உரிமை பாசத்தை 0% குறையாமல் தாங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது
இன்னும் கிராமங்களில் தாங்கள் வளர்க்கும் ஒரு பசு பத்து ஆண் பிள்ளைகளுக்கு சமம் என்று கருதப்படுகிறது
கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகள் கஞ்சி ஊற்றாவிட்டாலும் வளர்க்கும் பசு கஞ்சி ஊற்றும் என்று நம்பப்படுகிறது
பால் வித்து பட்டபடிப்பு முடிச்ச பல கிராமத்து பட்டதாரிகள் இதற்கு இன்றும் சான்று.
கால்நடைகள் பங்கு இல்லாமல் விவசாயமும் இல்லை. நாட்டின் தூண்கள் கிராமங்கள், கிராமத்தின் தூண்கள் கால்நடைகள்.