Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

Article 9 "இலங்கை குடியரசானது பௌத்த மதத்திற்கு முதலிடம் அளிப்பதுடன், அதற்கிணங்க, புத்த சாசனத்தைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது அரசின் கடமையாகும்,"

அனுரகுமார இனி என்ன செய்ய வேண்டும்..? புதிய வரலாறு படைப்பாரா?

உலகில் வேறெங்கும் இல்லாத ஒரு நூதனமான கடமை இலங்கை ஜனாதிபதிமாருக்கு உண்டு. எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவர் “பௌத்த மதத்தின் காவலனாக” இருக்க வேண்டும் என்பதே அது. 

இந்த அரியவகை கடமையை, அரசியல் அமைப்பின் Article 9 பின்வருமாறு வலியுறுத்துகிறது. 
"இலங்கை குடியரசானது பௌத்த மதத்திற்கு முதலிடம் அளிப்பதுடன், அதற்கிணங்க, புத்த சாசனத்தைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது அரசின் கடமையாகும்,"

இதுதான் அது. இதை வைத்துக்கொண்டுதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இரவிரவாக புத்தர் சிலைகளை கொண்டுவருகிறார்கள். பொலீஸ்காரரையே காவ வைக்கிறார்கள். 
எனவே ஜனாதிபதி அனுர இதை மாற்றவேண்டும். அவர் கொண்டுவர இருக்கும் புதிய அரசியல் அமைப்பில் இந்த வசனமே இருக்கக்கூடாது. 

எப்படி மஹிந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என அடம்பிடித்தபோது, அதற்கு ஒரு சட்டத்தை இயற்றி ( Presidents’ Entitlements Repeal Bill ), பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அவரை ‘ஓட்டமெட்டிக்காக’ வீட்டைவிட்டு எழுப்பினாரோ, 
அதேமாதிரி, இதற்கும் ஒரு சட்டத்தை இயற்றி பிக்குமாருக்கு இருக்கும் தேவையில்லாத அதிகாரங்களை நீக்கவேண்டும். அப்பத்தான் நாடு உருப்படும். 
செய்வாரா..?