Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனர்த்த பாதிப்பிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப மாகாண சபைத்தேர்தலை நடத்தவும் - அரசிடம் வலியுறுத்தும் சுரேஷ்

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உதவிபுரிந்தாலும் முழுநாட்டையும் கட்டியெழுப்ப முடியாது.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம்இ மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் 
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உதவிபுரிந்தாலும் முழுநாட்டையும் கட்டியெழுப்ப முடியாது. 
விவசாயம் மற்றும் பெருந்தெருக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு பலகோடி ரூபா தேவை. அரசாங்கம் அன்பளிப்பு செய்வோர் மாநாட்டை நடாத்தவுள்ளதாக அறிகின்றோம். 

எது எவ்வாறாக இருந்தாலும் வரவு செலவுத்திட்டத்தில் மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. தேர்தலை விரைவாக நடாத்தி மக்கள் பிரதிநிகளிடம் அதிகாரங்களை கையளித்தால் மாகாண சபைகள் மூலம் புனருத்தான வேலைகளை மேற்கொள்ள முடியும் புலம்பெயர்ந்தோர் மூலமும் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 
எனவே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தால் மாத்திரமே வெள்ள அனர்த்த பாதிப்பிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் இந்தியா சென்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது, 
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பல்வேறு தரப்பினருடன் பேசுவதற்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ரணில் விக்கிரமசிங்க, மைத்திரி காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை கொண்டு வந்தால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு உள்ளதாகவும் சமஸ்டி தீர்வை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் நோக்குடன் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. 
இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த விடயங்களை எடுத்துக்கூற சென்றுள்ளதாக அறிவதாக  தெரிவித்தார்.