Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் தடைசெய்யப்படும்.

இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. 

குறித்த தரப்பினர் மேற்படி குறிப்பிட்டுள்ள நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான இல. 04 நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க, 

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தென் மாகாண தலைவர் ரசிக பிரசாத், 

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண தலைவர் சுமித் ரத்னாயக்க, 

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மேல்மகாகாண செயற்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.எல்.ரங்வல 

உள்ளிட்ட ஏனைய பங்கேற்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகத்தின் போது, ​​பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் வீதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் எந்தவொரு வீதிகளையும் மறிக்கவோ, போராட்டம் நடத்தவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மேலும், பாராளுமன்ற உறுப்பினருகளின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும், எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதை அனைத்து பிரதிவாதிகளும் ஆதரவாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.