Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தை: ஆதரவு தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை

.

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பலர் என்னிடம், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஆதரவளிப்போம் என கூறும் போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.

அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம் மக்கள் மத்தியில் தெளிவான காரணங்களுடன் அறிவிப்போம். மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.

எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடியவகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன் அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.