Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும்

.

 

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார்.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு, குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறை வழங்குவதுடன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை மீளவும் கடமைக்கு திரும்பச் செய்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முதற் கட்டமாக ஆரம்பிப்பது.

பின்னர், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், அவை நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம், மற்றும் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.