கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழாவினை சிறப்பிக்க மயிலாடுதுறை ஊர் மக்களுக்காக ஒரு நாள் பொருட்காட்சி!
.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் காவிரி கரையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு 5 கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில், தருமபுரம் ஆதீனம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இந்த கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழாவினை சிறப்பிக்க அந்த ஊர் மக்களுக்காக ஒரு நாள் பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
மேலும் இந்த பொருட்காட்சியில்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ராட்டினம் விளையாடவும், டெல்லி அப்பளம், பஞ்சு மிட்டாய், கோபி 65 என உணவுகளை ருசித்து மகிழவும் பொதுமக்கள் வருகை தந்தனர்.மேலும் பெண்களுக்கு தேவையான ஜிமிக்கி கம்மல், வளையல் என நிறைய கடைகளும் இருந்தது. குழந்தைகளுக்கு புல்லாங்குழல், மாஸ்க், உள்ளிட்ட பல்வேறு கடைகள் போடப்படடிருந்தது. மேலும் பறக்கும் தட்டு போல் உள்ள டோரா டோரா ராட்டினம், கொலம்பஸ், டிராகன் ராட்டினம், தோனி ராட்டினம், பிரேக் டான்ஸ், கப்பல் ராட்டினம்னு நிறைய வகையான ராட்டினங்களும் பொருட்காட்சியில் இருந்தது. குறிப்பாக இந்த பொருட்காட்சியில் உள்ளூர் மக்கள் மட்டும் வருகை தராமல் வெளியூர்களில் இருந்தும் நிறைய மக்கள் வருகை தந்து ஜாலியாக விளையாடி சென்றனர்.