Breaking News
தமிழ் மொழியின் இலக்கணக்கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையது-திரு.சதாசிவ பண்டாரத்தார்.
.
சொல்...
தமிழ் மொழியின் இலக்கணக்கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையது என்கிறார் கல்வெட்டாய்வாளார் திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்.
இவர் எழுதிய " சொல் வரலாறு " என்னும் கட்டுரையில் இச் செய்தியைப் பதிவு செய்கிறார்.
மற்ற மற்ற மொழிகள் எல்லாம் பெரும்பாலும் ஒலிக்குறிப்பைக் கொண்டே சொற்களை உருவாக்கியுள்ளன. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் ஒலிக்குறிப்புடன் பொருளை உணர்த்தும் வகையிலே சொற்கள் உருவாகியுள்ளன.
இதை தொல்காப்பியம்.. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (.642) என்று வரையறை செய்கிறது.
அடுத்தப் பாடலில்.. " பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். ( 643)
சொல் என்பது தன்னையும் ( ஒலிக்குறி, சொற்றொடர்) உணர்த்தவேண்டும் பொருளையும் உணர்த்த வேண்டும். இவ்விரண்டு பண்புகளை கொண்டதே சொல் எனப்படும்.
இதன் வழியேதான் தமிழ் மொழியின் அனைத்துச் சொற்களும் உருவாகியுள்ளன.
சொற்களின் பிறப்பு, வகைப்பாடு, அதனையொட்டி பிரிந்து சரியான பொருள்தரும் இலக்கணக்கூறு என்று தொடரும் செயல் என்கிறார்.
உறவு முறைகளை உணர்த்தும் சொற்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
அத்தன் என்னும் சொல் வரலாற்றுக் காலத்தில் தந்தையைக் குறிக்கப் பயன்பட்டது. அப்பரும், சுந்தரரும் மாணிக்கவாசகரும் இச்சொல்லை தங்கள் பாடல்களில் எடுத்தாண்டுள்ளனர்.
அத்தன் - தந்தை. அத்தனுடன் உடன்பிறந்தோர் மூத்தவர் பெரியத்தன். இளையோர் சின்னத்தன்.
அத்தனின் மனைவி - ஆத்தாள். ஆத்தாளின் உடன்பிறந்தோர் பெரியாத்தா, சின்னாத்தா.
அத்தனுடன் உடன்பிறந்த பெண் அத்தை. அத்தையின் மகன் அத்தான். அத்தையின் மகள் அத்தாச்சி. அத்தையின் கணவர் அத்தையன்பர்.
இதுபோல்.. அம்மை, அம்மா, தம்மை
அப்பன், தம் அப்பன், தகப்பன்.
ஐயா, ..
ஒவ்வொன்றின் உறவு முறைப் பிரிதலும் மூலச் சொல் ஒன்றிலிருந்தே தொடங்குகிறது.
இதுபோல்தான் அனைத்துச் சொற்களும்..
எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே.. தமிழ்ச் சொற்களின் பிறப்பும் கூட ஒரு அழகியல்தான்..
அன்புடன்.. மா.மாரிராஜன்.