Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் உண்மையெனில் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும்

.

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும்.

எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.