Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு!

.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.உலகக்கோப்பை உடன் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நடந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார்.கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ்.

நாளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இன்று சென்னை திரும்பிய குகேஷ்-ஐ தமிழக அரசு அரசு சார்பில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, பூங்கொத்து தந்து வரவேற்றார்.அதோடு, நாளை, தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், குகேஷ்க்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.அப்போது அரசு சார்பாக, குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் நிருபர்களுடன் பேசிய குகேஷ்,"உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது," என்று கூறினார்.