Breaking News
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
.
கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர்.
கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும்.
கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம், கனடாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது.