Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்,கொலைகள், அச்சுறுத்தல்கள்! - அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளது !

ஒரு நாட்டின் குடிமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்வது அரசாங்கமொன்றினது அடிப்படைப் பணியாகும். இங்கு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகவும் காணப்படுகிறது. இருப்பினும், நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது. கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ள சூழலில், இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விடயம்  தொடர்பாக நானும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தாலும், இதுவரை போதுமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதற்கான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்து கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சி தலைவர்.

பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,

1. நாடு முழுவதும் நிகழந்து வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்/ கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனில், இடைவிடாத துப்பாக்கிச் சூடுகள்/கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான குறிப்பிட்டதொரு திட்டத்தை அரசாங்கம் இந்த சபையில் முன்வைக்குமா?

2. நாடு முழுவதும் வன்முறை அதிகரிப்பதற்கும் தேசிய பாதுகாப்புக்கும் தொடர்பு இருப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக இல்லையா? வன்முறை அதிகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈர்ப்பில் ஏற்படும் எதிர்மறை தாக்கம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா?

3. நாடு முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் போதைப்பொருளுக்கு நேரடியாகப் பலியாகி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதே நேரத்தில் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதல்களால் சாதாரண மக்கள் கூட பலியாகி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்ததாகத் தோன்றுவதால், இதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் மாற்றுத் திட்டம் உள்ளதா? அது யாது?

4. பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? பதிவான சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது?