நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு: பொறுமை காக்கும் அரியநேத்திரன்
.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்த நிகழ்வு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை தனது விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
இந்த விஞ்ஞாபனம் இலங்கையின் எதிர்காலத்திற்கான ராஜபக்சவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்து தேசத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வுகளை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தனது தேர்தல் விஞ்ஞானத்தை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தாக்கது.