Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுவாமி விபுலானந்தர் அவர்களின் துறவற நூற்றாண்டு விழா.

.

சுவாமி விபுலானந்தர் அவர்களின் துறவற நூற்றாண்டு விழா.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற பூண்ட நூற்றாண்டு விழாவும், அவருடைய 78 ஆவது மகா சமாதி தின நிகழ்வுகளும் நேற்றையதினம் (19)  சனிக்கிழமை மானிப்பாயில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து கலை கலாசார பேரணி மானிப்பாய் இந்துக் கல்லூரி வரை ஊர்வலமாக நடைபெற்றது. பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரி மண்டபத்தில்  நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கெளரவ ஜகத் விக்ரமரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கெளரவ சண்முகநாதன்  ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அனிருத்தனன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மானிப்பாய் இந்துக் கல்லூரி  சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தரின் துறவற வாழ்க்கையும், தமிழ் மொழி, இலக்கியம், இசை, கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும்  நினைவு கூரப்பட்டன.

இந்நிகழ்வானது புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.