Breaking News
குஜராத் விமானநிலையத்தில் கைது பாதளஉலககுழு தலைவர் பொட்ட நவ்பரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.
மரணதண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நவ்பரின் மகன்!
குஜராத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன் – அதிகாரிகள் தகவல்.
இந்தியாவின் குஜராத் விமானத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் இலங்கை பாதளஉலககுழு தலைவர் பொட்ட நவ்பரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்;தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை சேர்ந்தவர் ஏனையவர்கள் கொழும்பு கிரான்ட்பாஸ் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 13ஐசேர்ந்தவர்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 27 வயது இளைஞன் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நவ்பரின் மகன் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை கல்வியை கைவிட்ட பின்னர் இவர் இந்தியாவிலிருந்து ஆடைகளை கொள்வனவு செய்து இலங்கைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதில் ஈடுபட்டார் என தெரியவந்துள்ளது.
2017 இல் இவர் இலங்கை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மேலும் இவர் இந்தியா துபாய்க்கு வர்த்தக நோக்கங்களிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொண்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.