Breaking News
வவுனியாவில் ஜனாதிபதி ரணிலின் பதாதைகள் அகற்றம்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை
.
வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டது.
வவுனியாவில் தேர்தல்பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைதினம் வவுனியாவிற்கு விஜயம்செய்திருந்தார்.
இதனையடுத்து வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்கஅமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகைதருவதற்கு முன்பாகவே பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விடயத்தினை செய்திசேகரித்துக்கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்த பொலிஸார் அவர்களது விபரங்களை பதிவுசெய்திருந்தனர்