Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நைஜீரியா மோட்டார் பைக் கொள்ளையர்கள் சுட்டதில் 50 பேர் பலி!

நைஜீரியாவில் உள்ள கொள்ளைக் கும்பல் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

நைஜீரியாவில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிலில் வந்த கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில்,போகோ ஹராம், ஐ.எஸ்., போன்ற பயங்கரவாதிகளுடன், ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்களும் ஏராளமாக உள்ளன. 

அந்த கும்பல் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு கெப்பி மாகாணத்தில், லகுராவா என்ற ஆயுத கும்பல் கால்நடைகளுக்காக 33 பேரை சுட்டுக்கொன்றது.

இந்நிலையில், மற்றொரு ஆயுத கும்பல், வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளது.
பைக்குகளில் வந்த ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்கள், துங்கன் டட்சே என்ற கிராமத்தில் புகுந்து விடிய விடிய துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்த அவர்கள், தப்பி ஓட முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.