Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன: இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம்.

.

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இந்தக் சந்திப்பின் போது, இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிரான்கோவிக், இலங்கைக்கும் இத்தாலிக்கும்  இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டினார்.

இத்தாலியில் வசிக்கும்  இலங்கை மக்கள் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார். அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இத்தாலி தூதரகம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் இத்தாலி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, சுற்றுலாத்துறை தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றியும் சபாநாயகர் தூதுவரிடம் விளக்கினார். அத்துடன், பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிதல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன.