Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீண்டும் வோதாளம் முருங்கை மரம் ஏறுகின்றதா? நரியின் நீலச் சாயம் வெளுக்கின்றதா?

இலங்கை அரசியலை, சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் – கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன!

இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மெத்தக்க பொடிவெலா ஸ்ரீ சுமன ஷைலாராம விகாராதிபதி சங்கைக்குரிய வட்டலத்தே சுமங்கல தேரருக்கு, “ஸ்ரீ பண்ணாலோக” கௌரவப் பட்டத்துடன், விமலகீர்த்தி பெந்தர வெல்லவிட்ட கோரள மற்றும் கலு வெல்லேபட பத்துவின் “அதிகரண சங்கணாயக்க” கௌரவ பட்டத்தை வழங்கும் நிகழ்வு 2025.03.16ஆம் திகதி ஸ்ரீ சுமன ஷைலாராம விகாரையில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர்களான டி.கே.ஜயசுந்தர, நிஷாந்த பெரேரா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கருணாதிலக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், கௌரவ சபாநாயகர் உடுகம தொலவத்த பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டதில் வசிக்கும் மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்து, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார். அப்பகுதியில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலையும் அவர் தரிசனை செய்தார்.

இந்த விஜயத்தின் போது, கௌரவ சபாநாயகர் கன்னெலியா வன சரணாலயப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், ஹினிதும கல்வாரி கத்தோலிக்க தேவாலயத்தில் காலி பிரதேசத்திற்கான அருட்தந்தை ரெட்மண்ட் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். தற்போதைய அரசியல் கலாச்சாரம் குறித்து தனக்கு ஒரு புரிதல் இருப்பதாகவும் பாராளுமன்றம் மூலம் அதைத் தொடர்ந்து பராமரிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கல்வாரி தேவாலயத்தைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கௌரவ சபாநாயகர் கவனம் செலுத்தியிருந்தார். இலங்கையில் மத சகவாழ்வு மற்றும் இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகள் குறித்தும், அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.