லெபனானில் போர் பதற்றம்: இலங்கையர்கள் குறித்து வெளியாக தகவல்
.
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜயவீர, தொழிலாளர்களுடன் தூதரகம் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது லெபனானில் உள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 7600ஐ அண்மித்துள்ளது.
இதில், கிட்டத்தட்ட 25 இலங்கைத் தொழிலாளர்கள் போர் நிலவும் தென் பிராந்தியங்களில் இருப்பதாகத் தூதுவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தவும், மக்கள் கூடும் இடங்களில் தங்குவதை தவிர்க்கவும் தூதுவர் அறிவுறுத்துகிறார்.
இலங்கையில் உள்ள அவர்களது குடும்பங்களின் உறவினர்கள் லெபனானில் உள்ள பணியாளர்களுடன் முடிந்தவரை தொடர்பு கொள்ளுமாறு தூதர் அறிவுறுத்துகிறார்.
இதேவேளை, இஸ்ரேலில் இருந்து துபாய், அபுதாபி மற்றும் புதுடில்லி ஊடாக கொழும்புக்கு வருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடம் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் விமான அட்டவணையில் மாற்றம் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.