Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

,

மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்வை மிக உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, நினைவுத்தூபியில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கு குழுமியிருந்தவர்கள் நினைவுத்தூபிக்குச் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து,  அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.