Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முல்லை பாடசாலையில் நடந்த விபரீதம்:63 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி சென்று தேனீக்கள் கொட்டிய நிலையில் 63 பேர் தற்போது வைத்தியசாலையில்

பாடசாலையொன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி சென்று தேனீக்கள் கொட்டிய நிலையில் 63 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள குறித்த பாடசாலை வளாகத்திற்குள் இன்று(30) காலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களையும் தேனீக்கள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்திற்குள்  அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது. 
இந்நிலையில் இன்றையதினம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் குறித்த பாடசாலை மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது. 
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண் ஆசிரியர்கள்3, பெண் ஆசிரியர் ஒருவரும், பெண் மாணவர்கள் 24, ஆண் மாணவர்கள் 18 பேர் உள்ளடங்களாக மொத்தம் 46 பேர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அத்தோடு ஒட்டிசுட்டான் வைத்தியசாலையில் பெண் ஆசிரியர்கள் 03, ஆண் ஆசிரியர் ஒருவரும் ஆண் மாணவர்கள் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.