Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்தாரா? சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு!

"யன்னலைத் திறவுங்கள் காற்று வரட்டும்" இல்லாத ஊருக்கு வழி சொல்லும் (ஆ)சாமி!

“பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈக்கோடா அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார்.

ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.அதன் பிறகு ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் தோன்றி உரையாற்றி வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், மரணமடைந்து விட்டார் எனவும் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ஆன்லைனில் தோன்றிய நித்யானந்தா தான் சமாதி நிலையில் இருந்ததாக விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு பல்வேறு நாடுகளுடன் கைலாசா நிர்வாகிகள் ஒப்பந்தம், அமெரிக்காவில் சில நாடுகளில் மோசடிக்கு முயன்றது என கைலாசாவை பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொலிவியா நாட்டில் நித்யானந்தா சீடர்கள் மோசடிக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் மீண்டும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார்.

அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார்.

இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் எந்த தகவல்களோ அல்லது மறுப்போ பதிவிடபடவில்லை.

இதற்கிடையே நித்யானந்தா வெங்கடேஸ்வர மூர்த்தி பவ சமாதி தரிசனம் என்ற பெயரில் அவர் பெருமாள் வேடத்தில் காட்சி கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.எனவே, நித்யானந்தா சமாதி அடைந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.”,