Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; தயார் நிலையில் சுகாதார சேவையாளர்கள்!

சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

சுவாச நோயைப் போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக சில ஆசிய வலய நாடுகளில் கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கொரோனாவின் உப திரிபே இவ்வாறு பரவலடைந்து வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன. 

மேலும், இது மிகவும் பாரதூரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும் திரிபாக அடையாளப்படுத்தப்படவில்லை. 

இலங்கையிலும் 20 வரையான வைத்தியசாலைகளில் சுவாச நோய் தொடர்பான கண்காணிப்புக் கட்டமைப்பொன்றை முன்னெடுத்து வருகிறோம். அதனூடாக இன்புளுவென்சா போன்ற கொரோன நோயும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

நாளாந்தம் வைத்திசாலைகளிலிருந்து நோயர்களின் பரிசோதனை மாதிரிகள் கிடைக்கப்பெறுகின்றன. அந்தத் தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதனால் மக்கள் இது தொடர்பில் அவசியமின்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை.

ஆயினும், சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். சுகாதார அதிகாரிகள் என்ற அடிப்படையில் அது தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம்.

கொரோனா நிலை அதிகரிக்கும் பட்சத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்குவோம். அதனை எதிர்கொள்வதற்கு எமது வைத்தியசாலைக் கட்டமைப்புக்கள், இரசாயன ஆய்வுகூட கட்டமைப்புகள், பயிற்சிபெற்ற சுகாதார சேவையாளர்கள் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள். என்றார்.