Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

செங்கொடிகளை ஏந்திய பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடனான மக்கள் விடுதலை முன்னணி

கொழும்பில், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் கோஷங்களை எழுப்பிய மக்கள்.

தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மேதினக் கூட்டத்தில் செங்கொடி ஏந்திய பல்லாயிரக்கணக்கான மக்கள்.

செங்கொடிகளை ஏந்திய பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடனான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மே தினக்கூடம் புதன்கிழமை (மே.01) கொழும்பில் நடைபெற்றது.ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் கோஷங்களை எழுப்பிய மக்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் அநுரகுமார திசாநாயக்க , இந்த ஆட்சியாளர்களை வீழ்த்தி மக்களாட்சியை நிலைநாட்டுவோம் என சூளுரைத்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்தவின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் பி.ப 3.30 ஆரம்பமாகிய அக்கட்சியின் மேதின பேரணியானது, மாலை 4.50 மணியளவில் விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மாவத்தையை வந்தடைந்தது.

‘நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்’ எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட நேற்றைய மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், “எமக்கு நீதி வேண்டும், சமத்துவத்தை நிலைநாட்டுங்கள், சட்டவாட்சியை உறுதிப்படுத்துங்கள், சிவப்பு அணியினரின் அரசாங்கத்தை உருவாக்க ஒன்றிணைவோம், ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவோம், ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம், எமது ஆட்சியில் பொருளாதார மீட்சி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கம் வேண்டும், தேசிய மக்கள் சக்தியே ஒரே தீர்வு, சிங்கள, தமிழ், முஸ்லிம்களாக இருந்தாலும் சிவப்பு குருதியுடைய மனிதர்கள் நாங்கள்” என்பன உள்ளடங்கலாக புரட்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.

அதுமாத்திரமன்றி “ஊழலை இல்லாதொழிப்போம், யுத்தத்தை நிறுத்து- பலஸ்தீன மக்களுக்கு உயிர்வாழ இடமளி, மக்கள் ஆட்சிக்கு இடமளிப்போம், அடுத்த தலைமுறைக்காக மக்கள் பலத்தை வெற்றிபெறச்செய்வோம்,  உலக வல்லரசுகளின் யுத்தவெறியைக் கண்டிக்கிறோம், தேசிய சுதந்திரத்துக்காக திசைகாட்டியுடன் ஒன்றிணைவோம், மக்கள் நேயமுள்ள ஆட்சிக்குத் தயாராவோம், ஊடக சுதந்தரம் – ஜனநாயகத்தைக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவோம், உழைக்கும் மக்கள் வலிமையுடன் ஓரெழுச்சியில், எட்டுமணிநேர வேலைநேரத்தில் கை வைக்காதே’ என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், சமூகநீதி, தொழிலாளர் நலன் ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான தேசிய மக்கள் சக்தியின் மேதின பேரணி, கன்னங்கர மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடையை அண்மித்து நிறைவுற்றதுடன், அவ்வீதியில் செங்கொடி ஏந்திய மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

இதேவேளை புதன்கிழமை (மே.01) காலை யாழ்ப்பாணத்திலும், பி.ப 3 மணியளவில் அனுராதபுரம் மற்றும் மாத்தறையிலும் தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது.