Breaking News
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும்; அமைச்சரவைக்கு ரணில் அறிவிப்பு.
திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும்; அமைச்சரவைக்கு ரணில் அறிவிப்பு.
திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) முற்பகல் நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அல்ல, ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காகவே பணம் ஒதுக்கியுள்ளது என அமைச்சர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் கோரிக்கை அண்மைய நாட்களாக கொழும்பு அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. அத்துடன், விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற பேச்சும் அடிபட்டது. இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.