Breaking News
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் கண்டுபிடிப்பு? கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியில் உருக்குலைந்த நிலையில்!
இரண்டு மனித எச்சங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், எட்டாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் நேற்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது மேலும் ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து நேற்று முன்தினம் (11) மூன்று மனித எச்சங்களும் நேற்று (12) இரண்டு மனித எச்சங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.