Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெடுக்குநாறிமலை சர்ச்சை: உயர்நீதிமன்றில் இணக்கத் தீர்வு

.

 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பிரதேசம் தொடர்பான சர்ச்சைக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு ஒன்று காணப்பட்டது.

மேற்படி ஆலயம் காணப்படும் பிரதேசத்தில் தொன்மையான மரபுரிமை சின்னங்கள் இருக்கின்றன என்று தெரிவித்து, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு, மூன்று பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரட்ண, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயப் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

தொன்மையான மரபுரிமை இடங்கள், நிலையங்கள், சின்னங்கள் அங்கிருந்தாலும் வரலாற்றுக் காலத்தில் இருந்து அங்கு மேற்படி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடு நடைபெற்று வருவதால் அதைக் தடுக்க முடியாது, தடுக்கக் கூடாது என்று இருவரும் வாதிட்டனர்.

மேற்படி தொன்மையான மரபுரிமை மையங்களுக்கு பாதிப்போ, சேதமோ ஏற்படுத்தாமல் இரண்டு தரப்பினரும் தங்கள் வழிபாடுகளை தடையின்றி முழு அளவில் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இணக்க ஏற்பாட்டை நீதிமன்றம் வழங்கியது.

இவ்விடயத்தை ஒட்டி வவுனியா நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கும், உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த இணக்க ஏற்பாட்டை தெரிவித்து, அதன் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.