ரஷ்யாவுடன் நேரடி போரில் நேட்டோ… அமெரிக்க ஏவுகணைகள் மாஷ்கோவை தாக்குமா?…
.
உக்ரைனில் நீண்ட தூர ஏவுகணை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி போரில் ஈடுபடுகிறது என்றே கருதப்படும் என 14 செப்டம்பரில் அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் என புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகள்:
ரஷ்யாமீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திடமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நீண்ட தூர மேற்கத்திய ஏவுகணைகளை தனது நாட்டிற்குள் ஆழமாக தாக்குவதற்கு பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கை போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேட்டோ கூட்டணி தலைவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தற்போது நேட்டோவின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் – ரஷ்யாவுடன் போரில் நேரடியக ஈடுபட்டுள்ளன. அப்படியானால், மோதலின் சாராம்சத்தில் ஏற்படும் மாற்றத்தை மனதில் கொண்டு, எங்களுக்கு முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொருத்தமான முடிவுகளை எடுப்போம், என்று புட்டின் கூறியுள்ளார்.
புட்டினின் கருத்துக்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ நட்பு பங்காளிகளை எச்சரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்தி ரஷ்ய இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு உக்ரேனியப் படைகளை அனுமதிக்கும் சாத்தியக்கூறுகள் பெருகிய முறையில் இப்போரில் புதிய நிலை உருவாகி உள்ளது.
நேட்டோவின் போர் ரஷ்யா மீது :
தற்போதய போரில் நேட்டோ பங்காளிகளிடையே ஒரு பரந்த மூலோபாய மாற்றத்திற்கு ஏற்ப ஏவுகணை கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், கீய்விற்கு சமீபத்தில் சென்றிருந்தபோது வலுவான ஆலோசனையை வழங்கினார்.
ரஷ்யாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மையமாகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்தின் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்கு வந்தார்.
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் எல்லை தாண்டிய தாக்குதல்களை அனுமதிக்கும் கொள்கையை அமெரிக்கா சரிசெய்தாலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்னும் நீண்ட தூர அமைப்புகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கவில்லை.
உக்ரேனை ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்க அனுமதிப்பது மோதலை அதிகரிக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் முன்பு கவலையுடன் எச்சரிக்கை தெரிவித்தனர்.
போர்க்கள முன்னேற்றங்களை ஒருங்கிணைக்க உக்ரைன் கடினமாக போராடி வருவதால், ரஷ்யப் படைகளால் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயங்களைத் தடுக்கும் வகையில், இருபுறமும் உள்ள சட்டமியற்றுபவர்களிடம் இருந்து, கட்டுப்பாடுகளை தளர்த்த அதிபர் பிடென் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
உக்ரேனிக்கு மேற்கத்திய உதவி:
நேட்டோவின் உதவி இல்லாமல், உக்ரேனிய இராணுவம் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் அதிநவீன உயர்-துல்லியமான நீண்ட தூர அமைப்புகளைப் பயன்படுத்தும் திறன் கொண்டதாக இல்லை என்று புட்டின் கூறியுள்ளார். அத்துடன் கீவ் அரசு தனியாக நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் புட்டின் எழுப்பியுள்ளார்.
அமெரிக்க இராணுவம் ஏற்கனவே உக்ரைனுக்கு உளவுத்துறை வசதிகளை வழங்கியுள்ளது. மேலும் தற்போது நீண்ட தூர தாக்கும் ஆயுத அமைப்புகளுடன், ரஷ்யாவை அழித்து இலக்கு வைப்பதில் இதற்கு முன்பும் அமெரிக்கா உதவி செய்துள்ளது.
உக்ரேனுக்கு தொடர்ந்து இராணுவ உதவியின் ஒரு பகுதியாக, உக்ரேனியப் படைகளுக்கு செய்மதி உளவுத்துறையை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அமெரிக்கா தனது உளவுத்துறை பகிர்வை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது பதிலளிக்க மறுத்து விட்டத
ரஷ்யா ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெறுவதை நாங்கள் இப்போது பார்த்தோம். இது உக்ரைனில் அவர்களின் ஆக்கிரமிப்பை மேலும் வலுப்படுத்தும், எனவே யாராவது போர் விரிவாக்க நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், அது புட்டின் மற்றும் ரஷ்யாவை பாதிக்கத் தோன்றும் என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் கூறியுள்ளார்.
அணுசக்தி நோக்கி நேட்டோ?
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அணு ஆயுதங்களைச் சுற்றி “அதிகரிக்கும் சொல்லாட்சி” பற்றி எச்சரித்து உள்ளார். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதுவர் புட்டினின் கருத்துக்களை வலியுறுத்து, ரஷ்யாவின் அணுசக்தி திறன் அமைதி காப்பை நினைவூட்டினார்.
ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்ய தூதர் Vasily Nebenzya, உண்மைகள் என்னவென்றால், அணுசக்தி போக்கில் நேட்டோ நேரடியாக உள்ளது என எச்சரித்தார்.
பலரும் ஆபத்துக்களை மறந்துவிட்டு பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது பாரிய ஆபத்து என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
2023 அக்டோபரில் அதிகபட்சமாக சுமார் 290 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய நீண்ட தூர இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா முதன்முதலில் வழங்கியது.
கீய்வ் அரசு அதன் மேற்கத்திய ஆதரவாளர்களை இப்போர்க்களத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்த அனுமதித்தது. ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூரத்தை வழங்கக்கூடிய ஆயுத அமைப்புகளை முழுமையாக அனுமதித்தது.
அண்மையில் உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி Rustem Umerov, உக்ரேனிய நகரங்களை தாக்க ரஷ்யா பயன்படுத்தும் விமானநிலையங்கள் ஆழமான தாக்குதல்களின் வரம்பிற்குள் உள்ளன என்றும், நீண்ட தூர ஏவுகணைகளை பயண்படுத்த கூறினார்.
ரஷ்யா வசமுள்ள கிரிமியாவில் வான் பாதுகாப்பு, வெடிமருந்து கிடங்குகள் மற்றும் விமானநிலையங்கள் உட்பட உயர் மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்களை குறிவைக்க உக்ரைன் தற்போதைய நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை பயன்படுத்துகிறது.
நேட்டோ நாடுகள் ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூர தாக்குதல்களுக்கு மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்.
நேட்டோ நாடுகள் ரஷ்யாவை எதிரியாக மாற்றக் கூடாது. இதனால் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றும் புட்டின் கூறியுள்ளார்.
மாஸ்கோ அணு ஆயுதங்களை பாவிக்காது:
மேற்கத்திய ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்க உக்ரைன் அனுமதித்ததை அடுத்து மாஸ்கோ கடுங்கோபம் அடைந்துள்ளது. ஆயினும் மாஸ்கோ ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா என்று மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்றும் புட்டின் எச்சரித்துள்ளார்.
அத்துடன் நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்ற கருத்தையும் புட்டின் நிராகரித்தார். நேட்டோ நாடுகள் ரஷ்யாவை எதிரியாக மாற்றக் கூடாது என புட்டின் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது அணுசக்தி தாக்குதல்்அதிகரிக்கும் அபாயம் குறித்து ராய்ட்டர்ஸ் கேட்டபோது, “எங்களிடம் ஒரு அணுசக்தி கோட்பாடு உள்ளது, அது என்ன சொல்கிறது என்று பாருங்கள். ஒருவரின் செயல்கள் நமது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது சாத்தியம் என்று நாங்கள் கருதுகிறோம், என்று திரு புட்டின் கூறினார்.
ஆனால் ரஷ்யா ஒருபோதும் அணு ஆயுதங்களை அநாவசியமாக பயன்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.