“இலங்கையின் பலவீனமான அரசாங்கத்தையே நாடுகள் விரும்புகின்றன“
.
இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டார்.
மேலும் வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன யூடியூப் வலைத்தளத்த்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடளித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாகவும் அதன் மூலம் அவர்கள் பயனடைய முயற்சிப்பதாகவும் அவர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.