Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெளிநாடுகளில்தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வருபவர்கள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம் - எஃப்.யு. வுட்லர்.

வெளிநாடுகளில்தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். 
2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை மூலம் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வருபவர்கள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாகவே இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் தூதரகங்களின் உதவியுடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 
பல கொலைச் சம்பங்களுடன் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.