Breaking News
தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை இல்லப் பிள்ளைகளிற்கு அளித்த தம்பதியினர்!
.
முன்னுதாரணமான செயற்பாடு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
சுமாா் 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொண்டு வந்து, தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, ஆலய இல்லறத்தில் ஒப்படைத்து இந்த தங்க நகைகளை தேவஸ்தானத்தில் வளா்கின்ற இல்லப் பிள்ளைகள் இல்லற வாழ்வில் இணைந்து செல்லும் போது, அவா்களிற்கு போட்டு விடுங்கள் என கூறி ஒப்படைத்தாா்கள் இந்த தம்பதிகள். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாி மனோ மோனகன் அவா்களும் இல்லப் பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்டவா்கள். வைத்தியா் மனோமோகன் போன்ற உயா்ந்த உள்ளம் படைத்த மனிதா்களும் வாழ்கின்றாா்கள் என நினைக்கும்பொழுது மனதிற்கு பெரும் ஆறுதலாக இருக்கின்றது.. வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாி மனோ மோனகன் அவா்களும், இல்லப் பிள்ளைகள் மீது கொண்ட அன்பிற்கு எனது நன்றிகளை தொிவித்துக் கொள்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.