விதைத்துவிட்ட விதைகளை தேடித்தவிக்கிறோம். அந்தப் பெயர்பலகையில் அவர்களின் ஜீவன் இருப்பது போன்ற ஆத்மார்த்த திருப்தி.
.
நல்லூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற மா வீர ர் நினைவு இல்லத்தின் காட்சிகளை பதிவு செய்து கொண்டு இருந்தோம். கொட்டகைக்கு வெளியில் சோவென பொழிந்து கொண்டிருந்த மழையினையும் பொருட்படுத்தாது மக்கள் வந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
வயது முதிர்ந்த தாயொருவர்இ சுமார் 70 வயதுகளை தொடுகிற தோற்றம்இ மெல்லிய உடல்வாகுஇ சற்று குழி விழுந்த கண்களோடு மா வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள நிரைகளை கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். சரி பார்க்கிறார் என்றுவிட்டு வேலையில் கவனத்தை செலுத்தினாலும் இடையிடையே அவரையும் கவனித்துக் கொண்டேன். அதே இடத்தில் நின்றபடி பெயர்களை உற்று உற்று தேடிக் கொண்டிருந்தார். மெல்ல அருகில் சென்று
'என்னம்மா பெயர இன்னும் காணேல்லயா?'என்றேன்.
'இல்ல பிள்ளைஇ கண்ணாடிய மறந்து விட்டிற்று வந்திற்றன்இ அதான்'.
'சரி விடுங்கோஇ என்ன பேர்?'
தன்னுடைய மகளின் பெயரை சொன்னார்.
'87 ம் ஆண்டோ?'
'ஓம் பிள்ளைஇ இதில இருக்குது 87'.
'சரி'.
'இப்ப இருந்தா எவ்வளவு பெரிய ஆளா இருப்பா'இ மனதிற்குள் நினைத்தபடி தேடத் தொடங்கினேன். அவரோ அருகில் நின்றபடி என்னுடைய முகத்தையும் பெயர் பட்டியலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றார்.
'காணேல்லயே அம்மா'
என்றபடி என் பங்கிற்கு 1986இ 1988 என்று முன்னும் பின்னுமாக தேடிப்பார்த்தபடி அவருடைய முகத்தை பார்த்தேன்.
'என்ர பெறாமகள் நேற்று பாத்தவளாம் இருந்தது எண்டு சொன்னவள்'.
'அப்ப சரிஇ நீங்கள் சொன்னது வீட்டுப் போர் தானே?'
'இல்லயம்மாஇ அது இயக்கப் பேர்'.
'வீட்டுப்பேர சொல்லுங்கோஇ இங்க அதுதான் இருக்கும்'.
சொன்னார் தேடினேன். இல்லை.
'எங்க நடந்தது?'
'மன்னாரில'
இப்படி ஒரு சில கேள்விகளோடு ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் தேடியிருப்பேன்இ
'சாஇ இருந்திரோணும்'இ என்று என்னையறியாமலேயே மனம் தேடத் தொடங்கியதுஇ அந்தத் தாயின் மகளை மீளக் கொடுக்க முடியாதுதான்இ ஆனால் தன் பிள்ளையினுடைய பெயரை பார்த்துவிட துடிக்கின்ற ஒரு தாயினுடைய உணர்வுகளை ஏமாற்றுவதற்கு மனம் ஒப்பவில்லை.
'1987 தான் இறந்தவோவா?' மீளவும் கேட்டேன்
'இல்லஇ 87 இல பிறந்தவா'.
'அப்பிடியா? அப்ப'
'2007 இல இறந்தவா'.
'அது அங்க இருக்கு' சொல்லிக்கொண்டு இருக்க அவரை அழைத்து வந்த உறவினரும் வந்து சேரஇ கூடவே நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் மற்றும் நான்கைந்து பொதுமக்கள் என்று வந்து சேர்ந்து 2007 ற்குள் தேடத்தொடங்க அவரும் அண்ணார்ந்து பார்த்தபடி நின்றிருந்தார்.
கடைசியில்
'இங்க இருக்குது' என்கிற குரல் அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலையும் மீறி என் காதுகளில் வந்து விழுந்தது. இயன்ற வரைக்கும் அந்த பெயர்ப் பலகையை தொட்டுப் பார்த்துவிட்டு சற்று வளைந்திருந்த வலது காலால் மெல்ல மெல்ல அடியெடுத்து வெளியே செல்லுவதை பார்த்தபடி நின்றுவிட்டு வேலைகளை கவனிக்கத் தொடங்கினேன்.
வெளியே மழையும் விட்டு விட்டுப் பொழிந்துகொண்டிருந்தது.
இனத்தின் குரல்