புதிய அரசாங்கமும் புதிய பயங்கரவாதச் சட்டமும்!
பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என மக்களுக்கு உத்தரவாதம் அளித்து ஆட்சிக்கு வந்த NPP அதற்கு சமமான வேறு ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கின்றது.
புதிய அரசாங்கமும் அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல் என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.
நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் சட்டம் ஊடாக வடக்கில் உள்ள மற்றும் தெற்கில் உள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டார்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள்.
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பு தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்படி மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சபைகள் கூறிவரும் நிலையில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என மக்களுக்கு உத்தரவாதம் அளித்து ஆட்சிக்கு வந்த பின்பு அதை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் அதற்கு சமமான வேறு ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார் மக்கள் போராட்ட முன்னணியின் அமைப்பாளர் நுவான் போபகே. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "PSTA பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம்" எனும் கருத்தில் பொது கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(18) : சென் ஜோன்ஸ் த பப்டிஸ்ட் தேவாலயத்தின் பரிஷ் மண்டபத்தில் இடம் பெற்றது.
அரசாங்கத்தை பாதுகாப்போம் நல்லாட்சி காலத்திலும் அவ்வாறே இடம்பெற்று கடந்த தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்கள் மிக அதிக அளவிலான வாக்குகளை இந்த அரசாங்கத்திற்கு வழங்கினார்கள் அவர்களும் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் எல்லாவிதமான ஒடுக்கு முறைகளை கொண்ட சட்டங்களை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார்கள் அதனால் இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெற்றது பயங்கரவாத சட்டத்தை ஒழிப்பதற்கு பதிலாக அதற்கு ஈடாக அதேபோன்ற இன்னும் ஒரு சட்டத்தை பெயர் மாற்றத்தில் கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
இந்த புதிய சட்டம் இருந்த சட்டத்தை விட மிகவும் பயங்கரமானது ஒன்று இந்த சட்டம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லாத நிலை ஏற்பாடு இந்த புதிய சட்டத்தின் ஊடாக மக்களுடைய குரல்களை ஒதுக்கி அடக்கி தங்களை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது.
யாழ்ப்பாணத்திற்கு வந்து கையை பிடித்து கும்பிட்டு நாங்கள் இனவாதிகள் அல்ல என்று பொய் உரைப்பதை விடுத்து அந்த மக்களுக்கு உண்மையாக செயல்படுங்கள் இந்த கபட நாடகம் வடக்கு கிழக்கு மக்களுக்கு போட வேண்டாம் இந்த சட்டத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும் இந்த சட்டம் தொடர்பாக வரும் வருகின்ற 28 ஆம் தேதி வரை மக்களுடைய கருத்துக்களை கேட்க உள்ளதாக அரசு கூறுகிறது.
மக்கள் கருத்துகளை கேட்பதாக கூறி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நோக்கமாக செயல்பட்டு வருகிறது.
சம உரிமை இயக்கமான நாங்கள் கூறுகிறோம் இந்த பொய் மோசடிகளை செய்யாதீர்கள் வடக்கில் தெற்கில் இந்த சட்டமூலாக லட்சத்துக்கு மேற்பட்ட நபர்களை அழித்தொழித்து விட்டு மீண்டும் அதே போன்று ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளன நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.
இதற்கு எதிராக போராட சம உரிமை இயக்கம் ஆயத்தமாக உள்ளது.
மக்களை ஒன்று கூட்டி போராட்டங்களை மேற்கொள்வோம் யாழ்ப்பாண மக்களை ஒன்று கூட்டி யாழ்ப்பாணத்திலும் போராடுவோம் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


