Breaking News
முள்ளிவாய்க்கால் பற்றி இங்கு அநேகருக்கு எதுவும் தெரியாது.
யுத்தம் முடிவடைந்த இடம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஒரு நேர உணவு இல்லாது இறந்ததை.

‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’முகநூல் பதிவு.
முள்ளிவாய்க்கால் பற்றி இங்கு அநேகருக்கு எதுவும் தெரியாது.
இரத்தமும் தசைத்துண்டுகளும் கிடந்த இடம் யுத்தம் முடிந்த இடம் என்றெல்லாம் சொல்லி முடித்துவிடுகிறார்கள். உண்மைதான் யுத்தம் முடிவடைந்த இடம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஒரு நேர உணவு இல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய கஞ்சிக்காக வரிசையில் நின்று இறந்ததை தவிடு நீக்காத ஏதோ ஒரு வகை அரிசியை தண்ணீரில் போட்டு அவித்து கஞ்சியாய் குடித்த கதை ஒரு தேங்காய் மூவாயிரம் ரூபா என விற்பனை செய்த கதை சொக்லெட் பஃப்1500 என விற்பனை செய்த கதை கோது நீக்காத பருப்பில் கறிவைத்த கதை வளர்த்த ஆட்டை மாட்டை வெட்டித் தின்ற கதை என எத்தனையோ கதைகள் முள்ளிவாய்க்காலுக்குள் அடங்கிப்போய் இருக்கிறது.
தேங்காய் இல்லை சிரட்டை எப்படி வந்தது எனக் கேட்கும் சிலர் உண்மையில் முள்ளிவாய்க்காலில் இருந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் நானும் நானும் என இடையில் பூந்து கதை சொல்கிறார்கள் தேங்காய் வைத்திருந்தவர்கள் தேங்காய் இல்லாதவர்கள் உணவில்லாதவர்கள் உணவு வைத்திருந்தவர்கள் விறகில்லாதவர்கள் வீடில்லாதவர்கள் காசில்லாதவர்கள் என எல்லாவிதமானோரும் அங்கிருந்தார்கள் ஆனால் அதிகமானோர் உணவின்றி வி.பு.களால் வழங்கப்பட்ட கஞ்சிக்காக காத்திருந்தார்கள் அதை அவர்கள் சிரட்டையிலும் வாளியிலும் பானையிலும் கோப்பையிலும் என மாறி மாறி வாங்கினார்கள் இந்தக் கஞ்சிக்கு இந்தப்பாத்திரம்தான் கொண்டுவரவேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் அங்கு இருக்கவில்லை பாத்திரங்கள் இல்லாது வருவோருக்கு கஞ்சி வழங்கியவர்களால் கொடுக்கப்பட்டதே சிரட்டையாகும் . அதனால்தான் அந்தக் கஞ்சியை சிரட்டையில் வழங்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள் .தேங்காய் எப்படி வந்தது சிரட்டை எப்படி வந்தது என்ற கதைகளை இனிக் கேக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.