Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழா!

.

வல்வெட்டித்துறை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மழைக்கும் மத்தியில் விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. 

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.

வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக் கூடாது என்றும், அதனை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்றும் இன்றைய நிலையில் விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.

ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.