Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணம்- ஒரு பார்வை!

,

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்.

மாவை சேனாதிராஜா 1942 அக்டோபர் 27 இல் யாழ். மாவிட்டபுரத்தில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகும்.

தனது இளமைக்கால கல்வியை வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதன் பின்னர் 1962 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்தார்.

1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில்,1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் முதலான எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

சேனாதிராசா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எஃப்/ஈ.பி.ஆர்.எல்.எஃப்/ டெலோ/ தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், 1989 ஜுலை 13 இல் அ. அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

2001 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சேனாதிராசா தெரிவு செய்யப்பட்டார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

எனினும், 2024 அக்டோபர் 7 அன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் தனது 82ஆவது வயதில் நேற்று காலமானார். இவருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.