Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ட்ரம்பினுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு கனடிய பிரதமர் நாடு திரும்பினார்

.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

கனடிய ஏற்றுமதி பொருள்களுக்கு வரி விதிப்பதாக புதிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் கனடாவில் பெரும் சர்ச்சை நிலைமை உருவாகி இருந்தது.பல்வேறு மாகாணங்கள் இந்த வரி விதிப்பு காரணமாக பொருளாதார பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்திருந்தார்.

இது அதிகாரபூர்வமற்ற வகையில் இடம் பெற்றிருந்தது. இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு பிரதமர் ட்ரூடோ நாடு திரும்பியுள்ளார்.

எவ்வாறு எனினும் இந்த சந்திப்பின்போது வரி அறவீடு தொடர்பிலான எவ்வித உறுதி மொழிகளையும் டொனால்ட் டிரம்ப் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.