ஒரு இலட்சத்தைக் கடந்த அனுரவின் யூடியூப் சனல்: மக்கள் இணைவதில் ”மகிழ்ச்சி” என்கிறார்
.
ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் பெயரில் இயங்கி வரும் உத்தியோகபூர்வ யூடியூப் சனலின் சந்தாதாரர்களின் (subscribers) எண்ணிக்கை ஒரு இலட்சத்தை (100k) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆயிரம் யூடியூப் சனல்களுக்கு மத்தியில், தேசிய மறுமலர்ச்சிக்கான அரசியலின் திசையுடன் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இணைவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்களது உணர்வுபூர்வமான பங்களிப்பைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் உற்சாகமானது. எதிர்காலத்தில் எங்களுடன் கைகோருங்கள்! ஒன்றாக இந்த நாட்டை கட்டியெழுப்புவோம் ” என அப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் அனுரகுமார குமார திஸாநாயக்க யூடியூப் சனல் மூலம் AKD LIVE 24 என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை ஆரம்பித்திருந்தார்.
இலங்கை அரசியல்வாதி ஒருவர் இவ்வாறான யூடியூப் நேரடி ஒளிபரப்பை ஆரம்பித்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.