பலதும் பத்தும்:- 15,04,2025 - கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புபோராட்டம்!
நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே அமைச்சர் விஜித!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புபோராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மீதும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றுக் (14) காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறுதெரிவித்தனர்.
தலதா மாளிகை யாத்திரைக்கு ஸ்டிக்கர்.
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தலதா மாளிகை யாத்திரைக்காகப் புறப்படும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கரை வழங்குமாறு இலங்கை பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க இடது மூலையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில், சாரதியின் பார்வைக்கு இடையூறாகாத வகையில் ஒட்டப்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்.டுக்கொண்டுள்ளனர். அத்துடன், பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈக்குவடாரில் தேர்தல் !
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி டேனியல் நொபோவாமீண்டும் வெற்றி பெற்றுள்ளாா். இது குறித்து அந்த நாட்டு தேசிய தோ்தல் கவுன்சில் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீத வாக்குகள்எண்ணப்பட்டுள்ள நிலையில் நொபோவாவுக்கு 55.8 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அவரை எதிா்த்துப் போட்டியிட்டஇடதுசாரி வேட்பாளா் லூயிசா கோன்ஸ்லெஸுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிஜி தீவில் நள்ளிரவு 1.32 மணிக்கு 6.5 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 174 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாகஉடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், நேற்று மியன்மார் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மதுபானம்!
சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதியதொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. 1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று திணைக்களம் கூறுகிறது.
மதுவரித் திணைக்களத்தின் சோதனை
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபானவிற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைதுசெய்யப்பட்டுள்தாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த நபர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சோதனையின்போது, மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டஅனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று மதுபான விற்பனை நிலையங்களை சீல் வைக்கவும் மதுவரித் திணைக்களம் நடவடிக்கைஎடுத்துள்ளது.
புன்னாலைக் கட்டுவான் வீதி விபத்து இரண்டுபிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்தில் இரண்டுபிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம்(வயது- 62) என்பவராவார். நேற்று அதிகாலை 1.15 மணியளவில் புன்னாலைக் கட்டுவன் வடக்கு சந்திக்குஅருகாமையில் உள்ள ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டி பெரெதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த மகளைஏற்றுவதற்காக அதிகாலை பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மேற்படி நபர் சென்றுகொண்டிருந்தபோது அதே திசையில் பயணித்த பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராக்டர்வண்டியின் பெட்டியுடன் மோதுண்டு உயர்ந்துள்ளார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இம் மரணம்தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளைமேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது
தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மார்ச் 3 முதல் நேற்று காலை 6 மணிவரை 46 ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரெஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 48 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித!
நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே எனவெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில்உரையாற்றினார்.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும்தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம்தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டுதொடர்ந்து சிங்களத்திலும் கதைக்கிறேன்.
எங்களுக்கு இன மத சாதி பேதமிஎல்லை. நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். ஏனெனில்நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை - என்றார்.