பலதும் பத்தும்:- 26,03,2025 -யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்!
யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால்இளைஞன் பலி!

இளம் யுவதியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது!
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள்பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பெண்ணைச் சடலமாக மீட்டனர்.வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம்அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றச் செயல்களில் ஈடுடபட்டு வரும் நதுன் சிந்தகஎன்ற 'ஹரக் கட்டா' இன்று (26) காலை வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக மாத்தறை நீதிமன்றவளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர்தெரிவித்தார்.
இராஜ் CIDயில் முன்னிலை!
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ்வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில்முன்னிலையாகியுள்ளார்.
நேற்று (25) தனது யூடியூப் சேனலில் சுதத்த திலகசிறி தொடர்பில் வெளியிட்ட ஒரு தகவல் தொடர்பாகவாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும்அவர் தெரிவித்தார்.
தலதா மாளிகைக்கு பணம் வழங்குமாறு மோசடியான முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்த இராஜ்,குறித்த காணொளி உலகிலுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இரவு விடுதி மோதல் - சந்தேக நபர்கள் சரண் !
கொழும்பின் கொம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்குசந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகத்தில் சரணடைந்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக யோஷிதராஜபக்ஷ நேற்று (25) கொம்பனி தெரு பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டதுடன், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மோதலில் தாக்கப்பட்டார்.
இதில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால்இளைஞன் பலி!
யாழ்ப்பாணத்தில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின்போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஊர்காவற்றுறை பாலக்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த வயோதிபர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் மோட்டார்சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புளியங்கூடல் தெற்கு ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 82 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த!
மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அதற்காக தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் கூறினார். அரசியலில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்துள்ளதாக அரசாங்கம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறினார். இருப்பினும், பொது சேவைகளில் ஊழல் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் okபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது. நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.