Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஈஸ்டர் தாக்குதல் – எந்த அநீதியும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை!

.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் வழிநடத்தியவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்க விசேட தலையீட்டை ஆரம்பித்துள்ளோம். அதற்காக இடம்பெற்ற விசாரணைகளின் ஊடாக இந்த அறிக்கை காணாமல் போனது எப்படி? அவற்றின் பக்கங்கள் எவ்வாறு தொலைந்து போனது என்பது தொடர்பில் விசாரித்து வருகிறோம்.

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில், முன்னாள் சட்டப் பணிப்பாளர் தலையிட்டுதான் இந்த விடயங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கியிருந்தார். அப்படியானால் அந்த அறிக்கையின் சில பகுதிகள் எப்படி தொலைந்து போனது? ஒப்படைக்கும் போது இருந்தனவா? அதன் பிறகு என்ன நடந்தது? இதையெல்லாம் இந்த ஆய்வுக் குழு விசாரித்து வருகிறது. எனவே” இந்நாட்டு மக்களுக்கு எந்த அநீதியும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை” இவ்வாறு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.