Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்று!

நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல்.

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்று (15) காலை 8.00 - 8.05 மணிக்கு நடைபெற உள்ளது. 

உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், பயிர்களை சேதப்படுத்தும் வன உயிரினங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 

நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகள் மற்றும் இலக்கு தலையீடுகளுக்காக சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.