ஈழத் தமிழ் பெண்களின் ஓர் ஆளுமையாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம்.
இவர் ஆற்றிய பணி காலத்தால் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்.

திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களுக்கு எமது மரியாதை வணக்கம்!
ஆனந்தி அக்கா எனப் பரவலாக அறியப்பட்டிருந்த ஊடகஆளுமை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களுக்கு எமது மரியாதை வணக்கத்தைத் தெரிவிப்பதோடு அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கரங்களைத் தோழமையுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
ஆனந்தி அவர்கள்இ பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பான தமிழோசையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தவர். ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் தமிழர் சமூகத்தின் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் பற்றுறுதியுடன்செயற்பட்டவர்.
ஓர் அனைத்துலக ஊடகத்தின் பிரதிநிதியாக இருந்தவாறு ஊடக அறத்தைப் பேணிய வண்ணம் அவர் போராட்டத்தின் பக்கம் தன்னை இணைத்து நின்றவர். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தவர். தலைவரது ஒவ்வொரு முடிவுகளின் பின்னும் தலைவர் பின்பற்றும் போராட்ட அறம் உண்டு என உறுதியாக நம்பியவர்.
பனிப்போரின் பிற்பட்ட காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் மீது அரசுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட பின்னர் அனைத்துலக ஊடகங்களும் மெல்ல மெல்ல அரசுகளின் வழிகாட்டலுக்கு உட்டட்டன. . இந்தச் சூழலிலும் ஆனந்தி அவர்கள் அந்த வழிகாட்டலுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஓடுக்கப்பட்ட மக்கள் பக்கம் மனதால் நின்றவர். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேரக்கும் வகையில் பயன்படுத்தினார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களோடு இவர் கண்ட நேர்காணல் அக் காலத்தில் மிகவும் காலமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
ஆனந்தி அவர்கள் ஈழத் தமிழ் பெண்களின் ஓர் ஆளுமையாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். ஓய்வு பெற்ற பின்னர் அனைத்துலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டவர். பல இளைய தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்.
இவர் ஆற்றிய பணி காலத்தால் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.அவருக்கு எமது மரியாதை வணக்கம்!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்