Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பு -காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

.

மட்டக்களப்பு -காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு -காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர்
நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி பூங்காவை சுற்றி கோசங்கள் எழுப்பி பேரணி இடம்பெற்றது.

இதன் பின்னர் முள்ளிவாய்க்காக் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பிரதான தீபச்சுடர் ஏற்றி, மலர்மாலை தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.