Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.

தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.

ந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி, வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினராக பொதுச் சேவை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று (26) நாட்டில் பல்வேறு தரப்பினர் அனுஷ்டித்து வருகின்றனர். 

யாழ்ப்பாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினமும் நினைவுப் பேருரையும் இன்று (26) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு   அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார். 

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.