Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சஜித் அணியில் இருந்து இரு எம்.பிக்கள் விரைவில் வெளியேறுகின்றனர்: டொலர்களில் வெகுமதிகளைப் பெற்றுள்ளனர்

.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என்று தெரிவித்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, அவர்கள் டொலர்களில் வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விரைவில் வெளியேறவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் விபசாரம் செய்யும் இவர்கள் டொலர்கள் மூலம் கிடைத்த வெகுமதிகளுக்கு விலைபோயுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களையே இழக்கப்போகின்றோம். ஆனால், தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.” – என்றும் ஹர்சன ராஜகருண எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.